வெளியான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா கிழக்கு மாகாண (தமிழ் மொழி) மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரத்தியேக வகுப்பு வசதியற்ற சொறுவாமுனை கிராமத்தில் இருந்து தனது பெற்றோரின் ஊக்கப்படுத்தலினாலும் பாடசாலை அதிபரின் வழிகாட்டலிலும் சிறந்த ஆசிரியரின் கற்பித்தல் நுட்பத்தினாலும் சாதனை படைத்துள்ள சாதனை குட்டிக்கும் ஆசிரியர் அதிபர் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.