இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன் அவர்களே கட்சியின் மகாநாடு மட்டுமே பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகமே சட்ட ரீதியாக இயங்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பு இன்று களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சுpறிதரன் தலைவர் தெரிவிற்கு பிற்பாடு சுமந்திரனும் கைகோர்த்து நல்ல ஒரு சிறப்பான வழிநடத்தலில் இந்த கட்சியை கொண்டு செல்வோம் என கூறியிருந்தார்கள் அந்த செய்தியினை தொடர்ந்து அவ்வாறாக ஒற்றுமையாக கட்சிக்குள்ளே உள் கட்சி முரண்பாடுகள் இல்லாமல் நாங்கள் பயணிக்க வேண்டும் என்பதற்காக ஏனைய தெரிவுகளிலே செயலாளர் உட்பட ஒரு இணக்கமான முறையிலே அதை தெரிவுகள் நடந்தால் சிறப்பாக அமையும் என மத்திய குழு அனைத்து உறுப்பினர்களும் அந்த இடத்தில் கூறியிருந்தார்கள்.
இதில் தலைவர் ஸ்ரீதரன் கூறியிருந்தார் சுமந்திரன் அவர்களை சிரேஷ்ட உப தலைவராக நியமிக்கலாம் ஒற்றுமையாக பயணிக்கலாம் என கூறப்பட்டது ஆனால் சுமந்திரன் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை அவர் கூறுகின்றார் பொதுச் செயலாளர் பதவியாக இருந்தால் தான் அதை ஏற்க தயார் என கூறியிருந்தார்
அதனைத் தொடர்ந்து நமது நிர்வாக செயலாளர் குணநாயகம் ஐயா அவர்கள் கட்சிக்கு தான் செய்த சேவைகளையும் கூறி இந்த நிர்வாக செயலாளர் பதவியிலே அவர் செய்து சேவைகளை கூறி தானும் இந்த செயலாளரின் பதவியினை விரும்புவதாக கூறியுள்ளார் அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிடும் போது முதலாவதாக சுமந்திரன் அவர்கள் இந்த செய்தியை கூறியதன் பிற்பாடு முதலாவதாக அரியநேந்திரன் அவர்கள் ஸ்ரீ நேசன் அவர்களே முன்மொழிவதாக கூறியிருந்தார் அதனைத் தொடர்ந்து கொழும்பு கிளையினுடைய உறுப்பினர் மத்திய குழு உறுப்பினர் சினையாற்றின வடிவில் அவர்கள் சாணக்கியன் பொருத்தமானவர் என அந்த இடத்திலே கூறியிருந்தார் இவை அனைத்தும் இடம்பெறும் போது நான் மௌனமாக தான் இருந்தேன்.
பொதுச் சேர்ந்த ஒரு மத்திய குழு உறுப்பினர் எழுந்து கூறினார் இல்லை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு செயலாளர் வந்தால் சிறந்ததாக இருக்கும் என கூறியிருந்தார் எழுதப்படாததாக இருந்தாலும் கிழக்கு மாகாணத்திலே செயலாளராக வந்தால் சிறப்பாக இருக்கும் என கூறியதன் அடிப்படையில் சுமந்திரன் அவர்கள் தான் அந்த விடயத்தை ஏற்றுக் கொண்டு செயலாளர் பதவி எனக்கு தேவையில்லை என கூறியிருந்தார் எதுவும் கூறவில்லை ஆனால் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார் கிழக்கு மாகாணத்தில் செயலாளராய் தெரிவு செய்வதாக இருந்தால் நாங்கள் ஒற்றுமை என்கின்ற பெயரிலே உள் கட்சி முரண்பாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கின்ற காரணத்திற்காக மூன்று பேரினுடைய பெயர்கள் ஒன்று அம்பாறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இல்லாவிட்டால் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குகதாசன் இந்த மூவரில் அவர் தேர்வு செய்யப்பட்டாலும் நான் அவர்களுடன் சேர்ந்து கட்சியினுடைய வளர்ச்சிக்காக உழைப்பேன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இரு அணிகளாக பிரிய கூடாது என அந்த இடத்திலே சொல்லப்பட்டது.
கிழக்கு மாகாணம் என்பது திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களுமே கிழக்கு மாகாணம் நாங்கள் வடக்கு கிழக்கு என பிரிந்திருக்கக் கூடாது அதிலும் கிழக்கு மாகாணத்தில் மட்டு அம்பாறை திருகோணமலை என பிரிந்திருக்கக் கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு.
அந்த இடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் தன்னுடைய பெயர் முன்மொழியப்பட்டதன் காரணத்தினால் மேடையில் சென்று தான் ஏன் செயலாளர் பதவிக்கு பொருத்தமானவர் என்று சொல்வதில் கூடிய கருசினை காட்டுவதை விட என்னை பார்த்து முதிர்ச்சி இருக்க வேண்டும் செயலாளர் பதவி எடுக்க வேண்டுமாக இருந்தால் அத்தோடு சாணக்கியன் சண்டை பிடிக்கும் என அந்த இடத்திலேயே அவர் கருத்துகள் காணப்பட்டது நான் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
இந்த விடயங்களில் நான் சண்டை பிடிப்பது என்று சொன்னால் நான் செயலாளர் பதவிக்கு பொருத்தம் இல்லை என்பதற்காக அது கூறப்பட்டது சண்டை பிடிப்பது என்று சொன்னால் நான் உண்மையில் மக்களிடையே கூறுவது என்னவென்றால் நான் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்னமே சண்டை பிடித்துள்ளேன் சண்டை பிடித்ததற்கான காரணம் என்னவென்று பார்த்தால் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் வேத்துச்சேனை என்கின்ற பிரதேசத்தில் அம்பிட்டிய சுனரட்டின தேரர் தொல்பொருள் விடயத்திற்கு அந்த இடத்திற்கு வந்து அவர் அடாவடியாக நடந்து எமது மக்களினுடைய நிலங்களை அபகரிப்பு செய்ய முயற்சி எடுத்தபோது நான் அந்த இடத்தில் சண்டை பிடித்தேன் அதேபோன்று விதுர விக்ரமா நாயக்க அவர்கள் குசலான மலைக்கு வந்து அந்த காணிகளை தொல்பொருளுக்கு எடுக்க வந்தபோது அதற்கும் சண்டை பிடித்தேன்.
மக்களின் பிரச்சினைகளுக்காக தான் சண்டை பிடித்துள்ளேன் தவிர என்னுடைய தனிப்பட்ட தேவைக்காக நான் இந்த இடத்திலும் சண்டை பிடிக்கவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களின் பிரச்சினைக்காக சண்டை பிடிப்பதுதான் செயலாளர் பதவிக்கு தகுதி இல்லாமல் போவதற்கான காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் பார்த்தார் என்பதும் மிகவும் ஒரு மன வேதனையை தரும் விடயம்.
தலைவர் ஸ்ரீதரன் அவர்கள் நேற்றைய தினம் பொறுப்பு மிக்க தலைவராக நடந்து கொண்டார் அதாவது கட்சியில் இருக்கும் அனைவரையும் ஒன்று சேர்த்து செல்ல வேண்டும் என்கின்ற நல்லதொரு முயற்சியை அவர் அந்த இடத்திலே எடுத்தார் அவர் கூறினார் மட்டக்களப்பில் இருந்து வந்த பிரதிநிதிகளுடன் நான் கதைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் அவர் அந்த இடத்தில் எழுந்து வந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் ஸ்ரீ நேசன் அவர்களுடன் உரையாற்றினார் மேடைக்கு சென்று தலைவர் மாவை சீன் அதிராஜா சுமந்திரன் அவர்களுடன் கதைத்து தான் செயலாளராக நியமிப்பதற்கு இணங்குவதாக அந்த இடத்தில் கூறி இருந்தார்.
இன்று இந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செயலாளர் பதவி வரவில்லை என்று முதலை கண்ணீர் வடிப்பவர்கள் அந்த இடத்தில் கூறி இருக்கலாம் நீங்கள் மட்டக்களப்பிக்க தான் செயலாளர்கள் பதவியை தர வேண்டும் என்று சாணக்கியனுக்கு வழங்குங்கள் என கூறி இருக்கலாம் இதில் குறிப்பாக ஒன்றினை சொல்ல வேண்டும் குக தாசன் ஐயா அவருக்கு செயலாளர் பதவி கிடைத்ததற்கு நான் எதிரானவன் அல்ல ஏனென்றால் திருகோணமலை மிகவும் ஒரு பலம் இழந்த நிலையிலே உள்ளது அந்த அடிப்படையில் அவருக்கு சகல திறமைகளும் காணப்படுகின்றது.
மட்டக்களப்பிற்கு செயலாளர் வரவேண்டும் என்று இரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரோடு இருந்தவர்களும் நினைத்திருந்தால் அந்த இடத்திலே ஸ்ரீதரன் அவரிடத்திலே கூறியிருக்கலாம் இல்லை நீங்கள் மட்டக்களப்பிலே தான் என கூறி இருந்தீர்கள் ஆகவே மட்டக்களப்புக்கு தான் வர வேண்டும் சுமந்திரன் அவர்கள் மட்டக்களப்பில் இருக்கிற சாணக்கியன் அவரின் பெயரை பரிந்துரை செய்திருக்கின்றார் நீங்கள் அதனை வழங்க வேண்டும் என கூறி இருக்கலாம்.
அதனைத் தொடர்ந்து பொதுச் சபை கூடுவதற்கு முன்பாக இன்னும் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது நாங்கள் இதனை ஏக மனதாக மத்திய குழு எடுத்த தீர்மானம் அந்த அடிப்படையில் பொதுச் சபை உறுப்பினர்கள் வரும்போது குழப்ப நிலை ஏற்படுமாக இருந்தால் அந்த இடத்தில் ஸ்ரீ நேசன் அவர்கள் தானாகவே அந்த பதவியை அந்த இணக்கத்தினை தெரிவித்ததன் அடிப்படையில் குகதாசனுடைய பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கூறவேண்டும் என்பதற்கும் அதற்கும் அவர் இணங்கி இருந்தார்.
முதிர்ச்சி என்பது ஒரு தலைமைத்துவ பண்பு என்பது ஒரு தீர்மானம் எடுத்தால் தன்னுடைய ஆதரவாளர்கள் அதனுடைய நியாயங்களை எடுத்துக் கூறி தாங்கள் எடுக்க முடிவுகளை தாங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
மீது சாணக்கியன் அவர்கள் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் செயலாளராக வருவதற்கு தடையாக இருந்தார் என்று கூறுவது முற்றிலும் தவறான ஒரு செய்தி இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் இதை செய்பவர்கள் உண்மையிலேயே தலை குனிந்து இருக்க வேண்டும் ஏனென்றால் நேற்றைய தினம் இடம் பெற்றதில் சிலர் இவற்றை தெரியாமல் பேசலாம்.
நேற்றைய தினம் மட்டக்களப்பிற்கு செயலாளர் வரவேண்டும் என நினைத்திருந்தால் திருகோணமலை அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மூன்று இடங்களிலும் இருந்து மூன்று பேரை பிரேரிககும் போது மட்டக்களப்புக்கு கட்டாயமாக தர வேண்டும் என கூறி இருந்தால் நிச்சயமாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செயலாளர் பதவி வந்து இருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செயலாளர் பதவி வரவில்லை என்றால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என நான் ஒருபோதும் கூற மாட்டேன் திருகோமலையும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் ஒரு மாவட்டம்.
இன்று இவர்கள் என்னை பிழையான ஒருவராக சித்தரிக்க நினைப்பதனை முற்றான ஒரு தவறான செயற்பாடு இதனை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் இதில் நான் மாத்திரம் அல்ல மத்திய குழுவில் ஏனையவர்களும் இருந்தார்கள் அனைவருக்கும் அந்த விடயங்கள் தெரியும்.
தங்களுடைய இயலாமை தங்களுடைய தவறுகளினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரவேண்டிய இந்த செயலாளர் பதவியை இழந்து விட்டு அதற்கு தாங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் இன்னுமொருவரிடம் குற்றச்சாட்டை முன் வைப்பது உண்மையிலேயே மோசமான ஒரு செயற்பாடு.
பொதுச் சபை உறுப்பினர்கள் உள்ளே வந்தபோது சில குழப்பங்கள் ஏற்பட்டது இதனை வாக்கெடுப்பிற்கு விடலாம் தானே என சில வாதங்கள் முன் வந்தது அந்த இடத்தில் அந்த வாதங்கள் முன் வரும் போது தலைவர் கூறினார் இதற்கு வாக்கெடுத்து நடத்த வேண்டும் என்பவர்கள் எழுந்து நில்லுங்கள் என்று கூறும் போது நான் எழுந்து நிற்கவில்லை அதைத் தொடர்ந்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என கூறுபவர்கள் எழுந்து நில்லுங்கள் எனக் கூறியபோதும் நான் அதற்கு மருந்து நிக்க வில்லை ஏனென்றால் மத்திய செயற்குழுவின் உடைய ஒரு உறுப்பினர் என்கின்ற வகையில் அந்த கூட்டுப் பொறுப்பு ஒன்று அனைவருக்கும் உள்ளது.
வாக்கெடுப்பு இடம்பெற வேண்டுமா என கேட்டபோது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எழுந்து சொன்னார்கள் நாங்கள் 30 க்கு குறைந்தவர்கள் தான் இருக்கின்றோம் இதில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு விருப்பமில்லை தயவு செய்து நாங்கள் மன்றாடி கேட்கின்றோம் எமது மாவட்டத்தின் நிலையை கருதி எமக்கு தந்ததை அவ்வாறே விடுங்கள் என கேட்டார்கள்.
என்னுடைய பார்வையில் நேற்றைய தினம் நடைபெற்ற அந்த தெரிவுகள் அனைத்தும் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் ஏனென்றால் நேற்றைய தினம் கூட்டத்தை ஒத்திவைப்பதோ கூட்டத்தை முடிப்பதோ அதற்கான அதிகாரம் துணைச் செயலாளருக்கு தான் சட்ட ரீதியாக காணப்படுகின்றது இது ஒரு கோவில் கூட்டமோ அல்லது விளையாட்டுக் கழக கூட்டமும் அல்ல இது இலங்கை தமிழர் கட்சி உடைய முக்கியமான ஒரு பொதுச் சபை கூட்டம் இதில் சட்ட ரீதியாக துணைச் செயலாளர் கௌரவ சுமந்திரன் அவர்கள் அதனையும் அவர் செய்ய வேண்டும் என முன் வரவில்லை அவருக்கு அந்த வாக்கெடுப்பை நடத்தச் சொல்லி ஸ்ரீதரன் அவர்களும் மாவை சேனாதிராஜா அவர்களும் அந்த பணியை அவருக்கு கொடுத்திருந்தார்கள்.
இந்த முடிவுகளில் மாற்றங்கள் வரும் என நான் நம்பவில்லை ஏனென்றால் சட்ட ரீதியாக மத்திய செயற்குழுவின் உடைய தீர்மானம் புதிய தலைவரான ஸ்ரீதரன் அவர்களினால் முன்மொழிக்கப்பட்டு அது இளம் செழியினால் ஆமோதிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மத்திய செயற்குழுவின் உடைய தீர்மானத்தை பொதுச் சபையினுடைய அங்கீகாரம் வழங்கியதன் பிற்பாடு இந்த தீர்மானங்களில் எந்த மாற்றங்களும் இடப்படாது.
நேற்றைய தினம் அந்த இடத்தில் ஒரு கைகலப்பும் இடம் பெற்றது அதற்கும் அவர் சிறந்த தலைவர் என்ற அடிப்படையில் உடனடியாக அவைகளை கட்சியிலிருந்து நீக்குவதாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் பற்றி பேசி இருந்தார் அத்தோடு சிறந்த தலைவராக அவர் நேற்றைய தினம் நடந்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்த செயலாளர் பதவி வேண்டும் என நினைத்திருந்தால் நேற்றைய தினம் கலையரசன் அம்பாறையில் திருகோணமலையில் குகதாசன் மட்டக்களப்பில் சாணக்கியன் இந்த மூன்று நபர்களில் ஒருவரை செயலாளராக நான் ஏற்றுக்கொள்ள தயார் மத்திய குழுவிலே இவர்களில் ஒருவரை தெரிவு செய்யலாம் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை மட்டக்களப்புக்கு கிடைக்க வேண்டும் என நினைத்திருந்தால் சாணக்கியனை அந்த இடத்திலே ஆதரித்திருக்கலாம்.
நேற்றைய தினம் சாணக்கியனுக்கு கிடைக்கக் கூடாது மட்டக்களப்புக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை சாணக்கியனுக்கு கிடைக்கக் கூடாது என்ற சொன்ன ஒரு காரணத்தினால் தாங்கள் வாபஸ் வாங்கியதன் காரணத்தினால் மத்திய செயற்குழு உடைய தீர்மானத்திற்கு நாங்கள் இணங்கவில்லை வாபஸ் வாங்க மாட்டோம் நாங்கள் குகதாசனை ஏற்கவில்லை எனக் கூறியிருந்தால் ஸ்ரீதரன் அவர்களும் மட்டக்களப்போடு கதைத்து ஒரு இணக்கமான முடிவு எடுத்து குகதாசனை முன்மொழிகின்றேன் என்று கூறி சொல்லக்கூடிய சூழ்நிலை வந்திருக்காது மட்டக்களப்பிற்கு இந்த செயலாளர் பதவி இல்லாமல் போயிருக்க மாட்டாது.