துறைநீலாவணையைச் சேர்ந்த வயிரமுத்து பேரின்பநாயகம் தீவு முழுவதுக்குமான நியமனம்..


துறைநீலாவணையைச் சேர்ந்த வயிரமுத்து பேரின்பநாயகம் அதிபர் அவர்கள் தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவானாக நியமனம்.

சமாதான நீதிவானக கடந்த வெள்ளிக்கிழமை  (19.01.2024 ) மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட வயிரமுத்து பேரின்பநாயகம் அவர்கள் இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்று தரத்துடன் மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றுகிறார் , இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான மானி பட்டம் பெற்று , கல்வி முதுமானி பட்டத்தையும் பெற்றவர்.

அதேபோன்று தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் பாடசாலை முகாமைத்துவம் டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டவர்.

மட்/பட் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் கணித பாட ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும்,  கல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றியவர், துறைநீலாவணையில் மாணவர்களின் கணிதபாட அடைவுமட்டத்தை உயர்த்துவதற்க்காக இலவசமாக பிரத்தியோக வகுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றார்.

அத்தோடு துறைநீலாவணை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகவும் சமூக சேவை பணிகளை முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.