மட்டு.இளைஞர்களினால் புதுப்பொலிவு பெற்ற ஊறணி பஸ் தரப்பு நிலையம்


மட்டக்களப்பு ஊறணியில் மிக மோசமான நிலையிலிருந்து பஸ்தரப்பு நிலையம் இளைஞர்களினால் அழகுபடுத்துப்பட்டுள்ளது.
ஊறணியில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் பல்வேறு தரப்பினரும் பஸ{க்காக காத்திருக்கும் இடமாகவுள்ளது.இது கடந்த காலத்தில் புனரமைக்காத நிலையில் மிகமோசமான நிலையிலும் மக்கள் அங்கு தரிக்கமுடியாத நிலையும் இருந்தது.
இதனை அவதானித்த மட்டக்களப்பு லியோ கழகத்தின் இளைஞர் யுவதிகளினால் இந்த பஸ்தரிப்பு நிலையம் அழகுபடுத்தப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.