World Vision நிறுவனத்தின் அனுசரணையில் மீன்பிடி உபகரணங்கள்


World Vision நிறுவனத்தின் அனுசரணையில் வெருகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் கிராமசேவகர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு தலா இரண்டு லட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் இன்று (11) வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது World Vision நிறுவனத்தின் அதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.