(பி.நவநீதன்)
காணாமல்ஆக்கப்பட்டவர்கள் உறவுகள் சங்க உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையான செயற்பாடுகள் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படுகின்றன.அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ரீதியில் கோத்தபாய மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களே காணாமல்ஆக்கப்பட்டவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகசெய்தமைக்கான காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
யுத்ததிற்கு பின்னரான சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள் மற்றும் காணாமல்போக செய்தல் சம்பவத்திற்கு பிள்ளையான் குழுவே காரணம் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் மேலெழும் நிலைமை காரணத்தினால் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளினை அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அமலநாயகி மற்றும் அவர்கள் சார்ந்த உறுப்பினர்களை அச்சுறுத்துவதோடு இனி போராட்டங்களை முன்னெடுக்கவேண்டாம் என்றும் மீறினால் கடுமையான விளைவினை எதிர்கொள்ள நேரிடும் எனவும் பிள்ளையான் குழுவினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் தமது கண்டனங்களை தெரிவித்திருக்கின்றது.
தற்போதை ஆட்சியாளர்கள் கருத்து சுதந்திரத்தினையும் சிறுபான்மை மக்களின் உரிமையினையும் மறுக்கும் நிலைமையே தொடர்ச்சியாக இருந்துவருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.