மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நான்கு திடீர் மரண விசாரணை அதிகாரிகள் நியமனம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பேர் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பழுகாமத்தினை சேர்ந்த அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்கான பணிப்பாளர் லயன் வி.ஆர்.மகேந்திரன் உட்பட நான்கு பேர் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதி அமைச்சு இவர்களுக்கான நியமனங்களை வழங்கியதுடன் இது தொடர்பான நிகழ்வு நீதியமைச்சில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பேர் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாக நியமனம் பெற்றுக்கொண்டார்.

போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரியாக வி.ஆர்.மகேந்திரனும் மட்டக்களப்பு பகுதி மரண விசாரணை அதிகாரியாக மன்சூர் அகமட்டும் காத்தான்குடி பிரதேச மரண விசாரணை அதிகாரியாக புஹாரி நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோன்று வாழைச்சேனை பகுதிக்கான மரண விசாரணை அதிகாரியாக பவளகேசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.