சீனி விலை அதிகரிக்குமா?


சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட சரக்கு வரியை அரசாங்கம் இன்று அதிகரித்திருந்தது.

ஒரு கிலோ சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

02 முதல் ஒரு வருடத்திற்கு இது அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.