திருகோணமலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கடற்படை சிப்பாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த கடற்படை சிப்பாய், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றிய 04 சிப்பாய்கள், தாம் தங்கியிருந்த இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த போது இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்து மோதலாக மாறியுள்ளது.
மாத்தளை - கந்தேகெதர பகுதியை சேர்ந்த 34 வயதான ஒருவரே மோதலில் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மாத்தளை - இம்புல்கொல்ல பகுதியை சேர்ந்த 42 வயதான கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.