அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் மண்டானை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
சுவிஸ் உதயம் ஏற்பாட்டில் அதன் தாய்ச்சங்க செயலாளர் அம்பலவாணர் ராஜனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் டினேஸ்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் க.துரைநாயகம்,செயலாளர் அம்பலவாணர் ராஜன்,உப பொருளாளர் பேரின்பராஜா அவரது பாரியார் மற்றும் சுவிஸ் உதயத்தின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் மற்றும் பொருளாளர் அக்கரை பாக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சுமார் 50மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் உப பொருளாளர் பேரின்பராஜா அவர்களின் சொந்த நிதியில் குறித்த பாடசாலையின் தேவைகளை நிவர்த்திசெய்யும் வகையில் ஒரு தொகை நிதியும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.