மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு!!


மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது.

பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சிறப்பு அதிதகளாக ஓய்வுபெற்ற முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் திரு பவளகாந்தன் மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளரும் PSI இணைப்பாளருமான திருமதி T உதயகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதிகள் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் ஆகியோர் பாண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்

அதனைத்தொடர்ந்து இறைவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வுகளில் அதிதிகளின் உரை மற்றும் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அத்துடன் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தது.