தேசிய உற்பத்தி திறன் போட்டியில் அதிக இடங்களை பெற்ற சுகாதார திணைக்களம்


தேசிய உற்பத்தி திறன் போட்டியில் அகில இலங்கை ரீதியில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிக்காந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளருமான சுரங்க குணரெட்ன பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.


தேசிய உற்பத்தி திறன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுகாதாரம் சார் திணைக்களங்கள் 38தரச்சான்றிதழ்களைப்பெற்றுக்கொண்டுள்ளதுடன் இரண்டு பிரதேச செயலகங்களும் தரச்சான்றிதழ்களைப்பெற்றுக்கொண்டது.மற்றும் பிரதேசசபை,கல்வி திணைக்களம் என்பன உட்பட 46 திணைக்களங்கள் இன்றைய தினம் தேசிய உற்பத்தி திறன் போட்டியில் வெற்றிபெற்று தரச்சான்றிதழ்களைப்பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சார் பணிகளை முன்னெடுத்துவரும் அரச திணைக்களங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றும் நடவடிக்கைக்காக தேசிய உற்பத்தி திறன் போட்டிகள் நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.