15 வயது பாடசாலை மாணவி கடத்தல்!!


அனுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் சிலரால் குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.