மட்டக்களப்பிலிருந்து சென்ற புகையிரதத்தில் மோதுண்டு யானை பலி -மூன்று தினங்களில் இரண்டு யானைகள் பலி


மட்டக்களப்பிலிருந்து நேற்று இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் மோதுண்டு யானையொன்று பலியான சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று தினங்களில் இப்பகுதியில் இரண்டாவது யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பமானது வெலிக்கந்தைக்கும் அலேசபுரத்திற்கும் இடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக புகையிரத பயணம் நீண்ட நேரம் தடைப்பட்ட நிலையில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்கள்,இராணுவத்தினர் இணைந்து உயிரிழந்த யானை அகற்றப்பட்டதன் பின்னர் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 10ஆம் திகதியும் அசேலபுரம் பகுதியில் யானையொன்று ரயிலில் மோதுண்டு உயிரிழந்த நிலையில் நேற்று மாலையும் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது.