மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்; -வெல்லாவெளியில் சம்பவம்


மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில்  நேற்று மின்சாரம் தாக்கியதில் 41 வயதான வினாசித்தம்பி - தியாகராசா என்பவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த நபர் துறைநீலாவணை கிராமத்தினை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
35ஆம் கிராமத்தில் உள்ள  உறவினரின் வீட்டில் உள்ள மின்சாரத்தினை எடுத்து அயலில் உள்ள வீட்டுக்கு மின்சாரத்தினை வழங்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மின்சாரம் தாக்கியவரை உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொன்டு செல்லும் போது உயிழந்துள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிபொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.