காத்தான்குடியில் வீட்டுக் கூரையை உடைத்து நகைகளைக் கொள்ளையிட்ட 4 இளைஞர்கள் கைது


உரிமையாளர்கள் வீட்டிலில்லாத போது வீட்டு கூரையை உடைத்து வீட்டினுள் இறங்கி நகைகளைக் கொள்ளையிட்ட 4 இளைஞர்களைக் காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு காத்தானகுடி பொலிஸ் பிரிவிலுள்ள டீன் வீதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் கொழும்புக்குச் சென்றிருப்பதை அறிந்து கூரை மீது ஏறி கூரையை உடைத்து உள்ளே இறங்கி வீட்டினுள் இருந்த அலுமாரியை உடைத்து அங்கிருந்த ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்த காத்தான்குடி பொலிஸார் சந்தேக நபர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூதூரில் உள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்துள்ள நிலையில் நகைகள் மீட்கப்பட்டதுடன் நகை கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.