மாமாங்கேஸ்வரர் கொடியேற்றம் நாளை –பக்திபூர்வமாக நடைபெற்ற கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு


இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தினையும் கொண்ட வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயமானது கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமாக கருதப்படுகின்றது.

வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.


நாளை திங்கட்கிழமை காலை விசேட பூஜைகள் நடைபெற்று நண்பகல் 12.00மணிக்கு வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

10தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் பிற்பகல் தம்ப பூஜை சுவாமி உள்வீதியுலாவும் மாலையில் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி காலை 7.30மணிக்கு தேரோட்டமும் மறுதினம் 16ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 12.00மணிக்கு மாமாங்கேஸ்ரவர் தீர்த்தக்குளத்தில் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது. 

ஆலய வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நன்மை கருதி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய வளாகத்தில் பக்தர்களின் நன்மை கருதி பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.