மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் கிழக்கு மாகாண சுகாதார,சுதேச அமைச்சினால் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் கிழக்கு மாகாண ஆளுனரினால் திறந்துவைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் மாகாண விசேட செயற்பாடுக்காக குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் சுமார் 13 மில்லியன் ரூபா செலவில் இந்த மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது.
குpழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் திருமதி டாக்டர் ஆர்.சிறிதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில்தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை,பூ.பிரசாந்தன் ஆகியோரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி முரளிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போரதீவுப்பற்று பிரதேச மக்கள் நீண்டகாலமாக விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த ஆயுர்வேத வைத்தியசாலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர்,
ஆங்கில மருத்துவமுறையென்பது பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே இங்குவந்தது.அதற்கு முற்பட்ட ஆயிரம்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு ஆயுர்வேத மருத்துவமுறைகள் மூலமே நோய்களை மக்கள் நீக்கிவந்தனர்.அக்காலப்பகுதியில் மக்களின் வாழும் காலப்பகுதியும் அதிகமாகயிருந்தது.தற்போது அந்த நிலைமையில்லை.எமது உணவு பழக்க வழங்கம்,மருத்துவ பழக்கவழக்கமே அதற்கு காரணமாகும்.அதன்காரணமாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி கிழக்கு மாகாணத்தில் ஆயுர்வேத மருத்துவத்துறையினை கிராம மட்டத்தில் சகல உதவிகளையும் வழங்கி விரிபுபடுத்துமாறு கூறியுள்ளேன்.
இங்கு வைத்திய பற்றாக்குறை பற்றி கூறப்பட்டது.வைத்திய பற்றாக்குறையானத இங்குமட்டும் அல்ல கிழக்கு மாகாணத்திலேயே வைத்தியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.முழு இலங்கையிலும் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
வைத்தியர் பற்றாக்குறைக்கு காரணம் தனியார் மருத்து பல்கலைக்கழகத்திற்கு இங்கு அனுமதியில்லை.அரசாங்கம் மட்டுமே அதனை செய்கின்றது.வருடாந்த வைத்தியர் தேவையினை கருத்தில்கொண்டு மாணவர்கள் உள்ளீர்க்கப்படும்போதே வைத்திய பற்றாக்குறையினை தீர்க்கமுடியும்.
40வருடத்திற்கு முன்பாக மொத்தமாகவுள்ள வைத்தியசாலைகளுக்கு பல்கலைக்கழகதிலிருந்து வெளியேறும் மாணவர்கள் போதுமானதாகயிருந்தது.இன்றும் அதே எண்ணிக்கையினையே தொடர்ந்துவருகின்றனர்.இன்றைய காலகட்டத்தில் ஐந்தாயிரம்பேர் மருத்துவர்களாக வெளியேறிவரவேண்டும்.அப்போதுதான் வைத்தியர் பற்றாக்குறையினை நீக்கமுடியும்.
சுகாதார அமைச்சருடன் இது தொடர்பில் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ மாணவர்களை அதிகரி;ப்பதற்கு சுகாதார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.அது எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என்றார்.