மன்னம்பிட்டி விபத்தில் உயிர்நீர்த்தவர்களின் இறுதிச்சடங்கு ஏறாவூரில்


பொலநறுவை மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தினை சேர்ந்த மூவரின் ஜனாசாக்கள் நேற்று இரவு கொண்டுவரப்பட்டு பெருமளவான மக்கள் கண்ணீருடன் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.

மூவரின் ஜனாசாக்களும் நேற்ற இரவு ஏறாவூருக்கு கொண்டுவரப்பட்டு உரியவர்களின் இல்லங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஏறாவூர் நூரூஸ்தலாம் பள்ளிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பிரார்த்தனை செய்யப்பட்டதை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நல்லடக்கத்தின்போது ஏறாவூர் பகுதியை சேர்ந்த பெருமளவான மக்கள் சமூகமளித்திருந்ததுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஷாகீர் மௌலானாவும் கலந்துகொண்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.

இடம்பெற்ற விபத்தில் ஏறாவூர் பகுதியை சேர்ந்த பெண்னொருவர் உட்படமூவர் உயிரிழந்திருந்தனர்.

இதன்காரணமாக ஏறாவூர் பகுதியானது சோகத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.