ஜனாதிபதி என்னை நம்பி அனுப்பி வைத்துள்ளார் நான் எனது கடமைகளை சரிவர செய்வேன் கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு.
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களைத்தான் நான் முதலில் சந்திக்கிறேன், தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்திப்பேன் கலந்துரையாடுவேன்.எனக்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது.
இந்த கிழக்கு மாகாணத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் நான் ஓரளவு அறிவேன்,
நிருவாகம் எனக்கு புதிதல்ல நான் பாரளுமன்ற உறுப்பினர், அமைச்சர்,பிரதி அமைச்சர்,மாகாண சபை உறுப்பினர் என பதவிகளை வகித்தவன்.
வளங்கள் நிறைந்த மாகாணம் இது அதனை சரியாக முகாமைத்துவம் செய்து நாட்டின் கடனை அடைக்க உதவுவேன்.
அனைத்து மாகாணங்களும் இணைந்துதான் நாட்டின் கடன்சுமையை குறைக்க பாடுபடவேண்டும், மலையக பெருந்தோட்ட மக்கள் ஆண்டுக்கு இரண்டு பில்லியன் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றனர், கிழக்கு மாகாணம் எந்த வகையில் இதனை செய்து முடிக்க முடியும்.
ஊடகவியலாளர் உரிமைகள் மதிக்கப்படுவதுடன் பாதுகாக்கவும் நான் உறுதுணையாயாக இருப்பேன்.
நாட்டுக்கான கடன் 50 அல்லது 60 பில்லியன், கடன் சுமையினை எமது பேரப்பிள்ளைகளுக்கும் கடத்த முடியாது.
கிழக்கு மாகாணத்தில் 75வீதமான அரச உத்தியோகத்தர்களே தமது கடமைகளை சரிவர செய்கின்றனர் அதனை நான் நன்கறிவேன். ஏனைய 25வீதமானோர் 75வீதமானோரின் உழைப்பு அர்ப்பணிப்புக்குள் மறைந்து வாழ்கின்றனர்.
சாதாரணமாக கிழக்கில் பதினையாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரமின்றி வாழ்கின்றனர்.
சூரிய மின்சக்தி உற்பத்தி வேலைத்திட்டம் நன்மையும், இலாபமும் சூழல் நேயமும் உள்ள வேலைத்திட்டம் அதனை இந்த மாகாணத்தில் முன்னெடுக்க முடியும்.
அவ்வாறு சாத்தியப்பட்டால் ஒரு அலகுக்கான கட்டணம் பத்து ரூபாவாக குறைக்க முடியும்.
கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டத்தை நான் ஆரம்பித்துள்ளேன், சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க வேண்டியுள்ளது அது சாத்தியமாகும் தொடர்ந்து என்னாலான பணிகளை ஜனாதிபதி மீழ அழைக்கும் வரை தொடர்வேன்.
இக் கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர்கள் பலரும் தமது கேள்விகளை எழுப்பியதுடன் தமது பாதுகப்பு தொடர்பான விடயங்களையும் முன்வைத்தனர்.
மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தொந்தரவு இல்லாத வகையில் புலனாய்வு கடமைகளை முன்னெடுக்க புலனாய்வு துறையினருக்கு ஆலோசனை வழங்கப்படும், என்னையும் புலனாய்வுத்துறையினர் புலனாய்வு செய்யக்கூடும் அது அவர்களின் தொழில் எனவும் சுட்டிக்காட்டினார் ஆளுநர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் சந்திப்பு 01.06.2023 வெள்ளிக்கிழமை இன்று மாலை 07.00மணியளவில் மட்டக்களப்பு TREATOO விடுதியில் நடைபெற்றது. இச் சந்திப்பில் மாவட்டத்தை சேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.