களுவாஞ்சிக்குடி ஓந்தாச்சிமடம் எரிபொருள் நிலையத்தில் இன்று 02.06.2023ம் திகதி அதி காலைமுதல் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசை.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையிலும் எரிபொருளுக்கு கடந்த இரு நாட்களுக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாரதிகள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதனை அவதானிக்க முடிகிறது.
எரிபொருளுக்கு விலை குறைக்கப்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிலையங்கள் முற்பணம் செலுத்தாத காரணத்தினால் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தாமதமாகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.