தூக்கிட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் தூக்கிட்ட நிலையில் இளைஞர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக உப்புவெளி பொலிசார் தெரிவிக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு (07) இடம்பெற்றிருக்கலாம் எனவும் இச்சம்பவத்தில் 17 வயதான வசந்தராஜா நிலுஜன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு இன்று (08) காலை வருகைதந்த திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.