மட்டக்களப்பு- கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் கடந்த பதினெட்டு வருடங்களாக பிரதி அதிபராகக் கடமையாற்றிய த. உமாபரமேஸ்வரன் தனது அறுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை (04) ஓய்வு பெற்றார்.
இதனை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை வழங்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் இன்று திங்கட்கிழமை (08) வித்தியாலய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதி அதிபரால் அறுபதாவது அகவையைச் சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. அத்தோடு அதிபரால் மேற்படி ஆசிரியர் பொன்னாடை போர்த்தப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டுக் கௌரவப்படுத்தப்பட்டார்.
இந்நிகழ்வில், அதிபர் மற்றும் ஆசிரியர்களால் பிரதி அதிபர் த.உமாபரமேஸ்வரனது பணிகள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
