வெல்லாவெளியில் இரண்டரை வயது குழந்தையின் மீது தாக்குதல் -தமிழரசு உறுப்பினர் கைது

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது இரண்டரை வயது மகள் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தியது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் பிரதீக்குமார் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று பகல் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய பாடசாலைக்கு முன்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்  செயற்குழு  உறுப்பினர் கோபாலன் பிரசாத் மற்றும் பிள்ளை மனைவி மூவரும் மோட்டார் சைக்கிளில் பிரயானம் செய்யும் போது வழிமறித்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பிரசாத்தின் இரண்டரை வயது பிள்ளை படுகாயமடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படும் தமிழரசி கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் பிரதீக்குமார் என்பவர் வெல்லாவெளி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

25-04-2023 வடகிழக்கில் இடம் பெற்ற ஹர்த்தால் நாளில் இவர் தனது  வர்த்தக நிலையத்தினை திறந்து வைத்திருந்ததாக தெரிவித்து முகப்புத்தகத்தில் இடப்பட்டிருந்த பதிவு ஒன்று தொடர்பிலேயே இவர் குறித்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக தெரியவருகின்றது.