மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மிகவும் பழமையான பனிச்சையடி ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வர்ணப்பூச்சுக்கான முழுமையான நிதியுதவியினை அகிலன் பவுண்டேசன் ஊடாக இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று மாலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆலய தலைவர் ந.அன்புராஜா தலைமையில் நடைபெற்றது.
அகிலன் பவுண்டேசன் தலைவரும் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தலைவருமான சமூகசேவகர் மு.கோபாலகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்காக இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆலய பரிபாலனசபையினரால் அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்காக இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரனிடம் விடுக்கப்பட்டவேண்டுகோளின் அடிப்படையில் பனிச்சையடி ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வர்ணப்பூச்சுக்கான முழுமையான நிதியுதவியினை வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வின்போது ஆலயத்தினாலும் பொதுமக்களினாலும் அகிலன் பவுண்டேசன் தலைவரும் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தலைவருமான சமூகசேவகர் மு.கோபாலகிருஸ்ணன் உட்பட அதிதிகளுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் ஆலயத்தில் விசேட பூஜையும் நடைபெற்றது.
அத்துடன் அகிலன் பவுண்டேசன் தலைவரும் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தலைவருமான சமூகசேவகர் மு.கோபாலகிருஸ்ணன் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளினால் ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
விளம்பரத்திற்காக உதவி செய்பவர்கள் இருக்கின்றார்கள், நடிப்புக்காக உதவி செய்பவர்கள் இருக்கின்றார்கள்,சிறு உதவியை செய்துவிட்டு கொக்கரிக்கின்றவர்கள் மத்தியில் பல உதவிகளை எவருக்கும் தெரியாமல் செய்துகொண்டிருப்பவரும் இருக்கின்றார் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

























