மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் பாடசாலை கல்வி செயற்பாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்!!


எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் முதலாம் தரத்தின் ஒவ்வொரு வகுப்பிலும் ஆங்கிலம் பேசும் முறை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில், 6-9 மற்றும் 10-13 வரையிலான அனைத்து பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வர தேவையான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு அடுத்த மாதம் முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறை தொடர்பான உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவாலை வெற்றிகொள்வதற்கு தாம் செயற்படுவதாக தெரிவித்தார்.

தகவல் தொழிநுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் கற்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அதற்கான பாட மேம்பாடு மற்றும் வளங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.