வந்தாறுமூலை - மயில்தங்கிய மலை நந்தீச்சரர் திருக்கோயிலில் விசேட பிரதோச பூசை!



 (மூலையூரான்)

மட்டக்களப்பு வந்தாறுமூலை ஈரளக்குளம் வாத்திரவட்டை திருவருள்மிகு ஆதி பரமேசுபரி உடனுறை மயில்தங்கிய மலை நந்தீச்சரர் திருக்கோயிலிலில் மாதம் தோறும் இடம்பெறும் சிவனுடையை சிறப்புமிகு விரதமாக கொள்ளப்படும் பிரதோச விரத பூசை இன்று (19) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

திருக்கோயில் அருட்சுனையரான பிரபாகரன் தலைமையில் காலை 10.00 மணியளவில் அபிசேகம் இடம்பெற்றதோடு , தொடர்ந்து 12.30 மணியளவில் அர்ச்சனை, தீபாராதனை, சிவபுராணம் படித்தல், பிரசாதம் வழங்கப்பட்டு பூசை நிறைவு பெற்றது.

இங்கு பூசைகள் செந்தமிழ் ஆகம முறையில் இடம்பெறுவது சிறப்பம்சமாகும்.

குறித்த பூசையானது வந்தாறுமூலையை சேர்ந்த  சு.காசிநாதன் குடும்பத்தினரால் சிறப்பாக இடம்பெற்றதுடன்

சிவனடியார்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.