தொழில்மேம்பாட்டை கருத்தில்கொண்டு சுவிஸ் உதயம் வழங்கிய உதவி

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் வாழ்வாதார மேம்பாட்டினை நோக்காக கொண்டு நாகா பசுமை நிறுவனத்திற்கு பெண்களுக்கான தொழில் மேம்பாட்டிற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுக்கப்பட்டவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குpழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்தி மற்றும் சுயதொழில் விருத்திக்கான பல்வேறு உதவி திட்டங்கள் சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துவருகின்றன.

இதன்கீழ் கல்லடியில் உள்ள நாகா பசுமை உற்பத்தி அமைப்பினை மேம்படுத்தி மிகவும் வறிய நிலையில் உள்ள பெண்களுக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடன் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவரும் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் தாய்ச்சங்க பொருளாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகம் ஐயா , மற்றும் தாய்ச்சங்க நிர்வாக உறுப்பினராகிய குமாரவேல் தர்மபாலன்,சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன்,உபதலைவர் கண.வரதராஜன்,உபசெயலாளர் நடனசபேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சுமார் மூன்று இலட்சம் ரூபா நிதியுதவி குறித்த நிறுவனத்தின் தலைவியிடம் வழங்கிவைக்கப்பட்டது.