இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணி நேற்று ஆரம்பமாகியது.
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் ஆரம்பமாகிய பேரணி மட்டக்களப்பை நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் எழுச்சிப் பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் அனைவரையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அழைப்பின் காரணமாக பேரணியினைத் தடுத்து நிறுத்த நேற்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் பொலிஸாரின் தடைகளையும் மீறி யாழ்.பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப்பேரணியானது பல ஆயிரம் பேரின் ஆதரவுடன் நடைபெற்றுவருகின்றது.
