பிரித்தானியாவில் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிப்பு


 

இலங்கையில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் பல பாகங்களிலும் கருப்பு தினமாக பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் மற்றும் சில தெற்கு பகுதிகளிலும் வாழுகின்ற மக்களினால் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன 

இதனை வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் பெப்ரவரி 4ஆம் திகதி கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.