மின்கட்டண அதிகரிப்பால் வந்த வினை- 66 வயதான தாயை தாக்கிய மகன் கைது!!


மின்சார கட்டணப் பட்டியல் அதிகரித்துள்ளதால், தமது வீட்டில் உடைகளை அயன் செய்ய வேண்டாம் என்று கூறிய தாயை தாக்கிய மகனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்தை - ஓமத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட மகன் பேருந்து சாரதி என்பதுடன், மின்கட்டணம் செலுத்தாததால் அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாக பக்கத்து வீட்டில் உள்ள அவரது தாயாரின் வீட்டிக்கு உடைகளை அயன் பண்ண சென்றுள்ளார்.

அதன்போது, ​​66 வயதான அவரது தாய், மின் கட்டணம் அதிகரித்துள்ளதால், வீட்டில் மின் அழுத்தியை பாவிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனால் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மகன் தாயின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக காவல்நிலையில் முறை்பபாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபரான 37 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.