திருடிய 17 பவுண் நகைகளை அடகு வைக்க முயன்றவர் கைது!!


திருடிய நகைகளை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்க முயன்றவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து 17 பவுண் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, பருத்தித்துறை – திக்கத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு வீடு புகுந்து 17 பவுண் நகைகள் களவாடப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருடிய நகைகளை நெல்லியடிப் பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்க முற்பட்ட வேளை அவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 17 பவுண் நகைகளும் கைப்பற்றப்பட்டன.