மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் சிரேஸ்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த கழகத்தின் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து கூட்டம் ஆரம்பமானது.
இதன்போது புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றதுடன் புதிய தலைவராக பா.செல்வராஜா தெரிவுசெய்யப்பட்டார்.பிரதி தலைவர்களாக ரூபாகரன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
செயலாளராக ப.கோபிராஜ் தெரிவுசெய்யப்பட்டதுடன் பொருளாளராக த.ரஜனிகாந்த் தெரிவுசெய்யப்பட்டார்.உபசெயலாளராக லோ.சுபோஸ்குமார் மற்றும் முகாமையாளராக அ.செபமாலையும் பயிற்றுவிப்பாளராக ஜேசுதாசன் ரெட்னசிங்கமும் தெரிவுசெய்யப்பட்டதுடன் நிர்வாகசபை உறுப்பினர்களாக விஜிகாந்த்,பிரியகுமார்.பவானிகாந்தன்,பிஜிதீபன்,பகீரதன்,காலீங்கன்,பரமன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்போது சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் கலந்துரையாட்பட்டதுடன் கழகத்தினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடலில் சிரேஸ்ட,புதிய உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.