மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் நிறைவுபெற்ற நிலையில் ஆறு இடங்களில் அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் ஆறு சுயேட்சைக்குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆத்துடன் இன்றைய தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நேரத்தினை கடந்துவந்ததற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஈரோஸ் ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
முட்டக்களப்பு மாவட்டத்தின் 12உள்ளுராட்சிமன்றங்களிலும் இம்முறை அரசியல் கட்சிகள் 121இடங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.இதேபோன்று 23சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளது.
போரதீவுப்பற்றில் ஜனநாயக மக்கள் காங்கிரசின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் மண்முனை தென் மேற்கு பிரதேசசபைக்கான வேட்புமனுவில் தமிழர் விடுதலைக்கூட்டணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காத்தான்குடி நகரசபைக்கான வேட்பு மனுவில் ஐக்கிய காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் சிலரின்வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.