இன்று முதல் இரண்டு மணி நேர மின்வெட்டு!!


நாட்டில் நவம்பர் 22 ஆம் திகதி (இன்று) முதல் நவம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

பகலில் 01 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இரவில் 01 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், டி, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, மற்றும் டபிள்யூ மண்டலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.