மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மதுபாவனை செய்தவர்கள் மாநகரசபை தீயணைப்பு பிரிவினரால் கலைப்பு!!


மட்டக்களப்பு பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றது.

"அங்கு சிலர் மதுபானம் குடிப்பதாக" அந்த முறைப்பாடு கிடைத்த உடன் விரைந்து சென்ற மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் நீர்த்தாரை பிரயோகம் செய்து அவர்களைக் கலைத்துள்ளனர்.

இவ்வாறான சமூக விரோதச் செயல்கள் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தற்போது எமது சமூகம் போதைப்பொருள் பாவனையில் மூழ்கிச் சீரளியும் நிலையில், மாணவர்களும் அதற்கு அடிமையாகி இருப்பது மனவேதனையாக உள்ளது.

இவ்வாறு இருக்க பொதுமக்கள் நடமாடும் இடங்களில் சமூக அக்கறை இல்லாத சில நபர்களால் எமது சமூகம் பெரிதும் பாதிப்படைகிறது.

குறித்த மதுப்பிரியர்களை கலைத்த மாநகர சபை தீயணைப்பு பிரிவினர்களுக்கு சமுக செயற்பாட்டாளர்களும் பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.