மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற பட்மின்ரன் சுற்றுப்போட்டி!!


மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான பட்மின்ரன் சுற்றுப்போட்டி மட்டக்களப்பு கள்ளியங்காடு BDBA உள்ளக அரங்கில் கடந்த 12 மற்றும் 13 ஆந் திகதிகளில் நடைபெற்றது.

இச்சுற்றுப் போட்டி மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் அதிபர் வீ.முருகதாஸ் தலைமையில் வித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திருமதி.கிறிஷாந்தினி குகேந்திரா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திருமதி எம்.சங்கர் ஆகியோரது ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்டது.

கடந்த 12 ஆம் திகதி போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்று மறுநாள் 13 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இறுதிநாள் பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் கலந்து சிறப்பித்ததுடன், இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக உதவிக்கல்விப்பணிப்பாளர்களும், கௌரவ அதிதிகளாக நிகழ்விற்கான அனுசரனையாளர்களும் கலந்து சிறப்பித்ததுடன், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.