மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2022 ம் ஆண்டுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் மற்றும் மட்டக்களப்பு எவர் சைன் விளையாட்டு கழகம் என்பன இறுதிப்பலப்பரீட்சையில் தெரிவாகியுள்ளது.
இதன் போது 3 / 2 எனும் கணக்கில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடத்தைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.
சிவானந்தா விளையாட்டு கழகத்தின் 50 வருட நிறைவை முன்னிட்டு கழகத்தின் தலைவர் கே.யோகராஜா தலைமையில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட 6 பேரை கொண்ட கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 9 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றி குறித்த சுற்றுப்போட்டியில் களமாடியிருந்ததுடன், இதற்கு இணையாக கடினப்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியும் நிகழ்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
