எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்- விசாரணைகள் ஆரம்பம்!!


கடந்த நாட்களில் நாட்டில் பல எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தி இருந்தன.

விலை குறையும் என்பதால் போதிய எரிபொருளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளாமையே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

எரிபொருள் நிலையங்களின் இந்த செயற்பாட்டால் நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசை தீவிரமடைய ஆரம்பித்திருந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிசக்தி அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.