மாவீரர் நாளும் மறைக்கப்படும் உண்மைகளும்! பா.அரியநேத்திரன்

(பொன்.நவநீதன்)

திர்வரும் 2022, நவம்பர்,27ல் மாவீரர் நாளாகும், கடந்த 2020, 2021 ஆண்டுகளில் மாவீர ர் தினத்தை நடத்த விடாமல் அப்போதய ஜனாதிபதி பலத்த தடைகளையும் நீதிமன்ற தடை உத்தரவுகளையும் வழங்கி அசரசுறுத்தியது போல் அன்றி இந்த வருடம் அவ்வாறு இல்லாமல் தற்போது துயிலும் இல்லங்களில் எல்லாம் சிரமதானப்பணிகளை பொதுமக்களும், தமிழ்தேசிய அரசியல் பிரமுகர்களும் முன்எடுத்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் தமது இயக்கத்தில் 1960, யூன,19, ல்  கம்பர் மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம் பிறந்து 1978,ல் விடுதலைப்புலிகளில் இணைந்து போராடிய  செ. சத்தியநாதன் என்ற இயற்பெயரை கொண்ட சங்கர் ஈழப்போராட்டத்தில் இருந்து முதலாவது வீரச்சாவை கடந்த 1982ம் ஆண்டு கார்திகை 27ல் தழுவிய  தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார். இவர் இறந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் அனைத்து இறந்த போராளிகளும் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படுகின்றார்கள். 

இவர் இறந்தது 27-11-1982 அன்று மாலை 6.05 ஆகும். சங்கர் என்பவரின் ன் நினைவு நாளையே ஏழு வருடங்களின் பின்னர் 

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகன் மாவீரர்நாளாக கடந்த 1989 கார்திகை 27,ம் திகதி பிரகடனப்படுத்தினார்.

முதலாவது மாவீரர் தினம் 1989, நவம்பர், 27,ல் நினைவுகூரப்பட்டது

அன்றய தினமே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால்  முதலாவது மாவீரர் தின உரையும் உத்தியோகபூர்வமாக நிகழ்த்தப்பட்டது அதனைதொடர்ந்து. 

1989, கார்திகை 27ம் திகதில் இருந்து மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டுவருவதை நாம் அறிவோம். ஆனால் 

கடந்த 2008 கார்திகை 27,வரை இருபது வருடங்கள் மாவீரர் தினம் வடகிழக்கில் உள்ள

சகல துயிலும் இல்லங்களிலும் இடம்பெற துடன விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் 20, மாவீரர் தின உரைகள் இடம்பெற்றும் இருந்தன.                              

2009, மே,18,ல் முள்ளிவாய்க்கால் போர் மௌனித்த பின்னர் 2009,நவம்பர், 27, தொடக்கம் எதிர்வரும் 2022, நவம்பர், 27, வரை 14, வருடங்கள் விடுதலைப்புலிகளால் மாவீரர் தினம் நினைவுகூரப்படாவிட்டாலும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்மக்கள் தொடர்ச்சியாக அந்த நிகழ்வை உணர்வுபூர்வமாக செய்து வருகின்றனர் என்பது உண்மை.


தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றனவற்றினை உள்ளடக்கிய பிரதேசம் மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். 

இவற்றுள் 62 சதவீதமானவை விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த பகுதிகளிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 சதவீதமும், மட்டு - அம்பாறையில் 18 சதவீதமும், வவுனியா, திருகோணமலை மாவட்டங்களில் 4 சதவீதமும் 2009, மே,18, க்கு முன்னர் இருந்தன. 

மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதியன்று மாவீரர்களின் பெற்றோர் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளிற்கும் ஈகைச்சுடர் ஏற்றுவர். அதே வேளை அங்கமைந்திருக்கும் பொதுச் சுடரினை தளபதிகள் ஏற்றி வந்தனர். நவம்பர் 27 மாலை 6.05 மணிக்கு வணக்கத் தலங்களிலும் மணிஒலி எழுப்பப்பெற்று சுடர் ஏற்றப்படும். 

இயக்கத் தளபதிகள் பொதுச்சுடர் ஏற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றுவர். 2009, மே,18ல் முள்ளிவாய்க்காலல் போரில் மௌனித்த பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும்பாலானவை இலங்கை படைத்துறையால் அழித்தொழிக்கப்பட்டன.

இதுவரை வடக்கு கிழக்கு நிலப்பரப்பில் மொத்தமாக 33, மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்தன.

2008, நவம்பர்,27, க்கு முன்னர் 27, துயிலும் இல்லங்கள் மட்டுமே இருந்தன ஆனால் 2008, நவம்பர், 27 தொடக்கம் 2009, மே,18, வரையும் உக்கிரமான போர் வன்னி நிலப்பரப்பில் ஏற்பட்டபோதோ மேலதிகமாக 06, துயிலும் இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டன.

மாவீரர் துயிலுமில்லங்கள் விபரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் (5) சாட்டி தீவகம் மாவீரர்துயிலுமில்லம்.  கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்,எல்லங்குளம்மாவீரரதுயிலுமில்லம்,கொடிகாமம்மாவீரர்துயிலுமில்லம்,  உடுத்துறைமாவீரர்துயிலுமில்லம்.ஆகிய ஐந்து துயிலும் இல்லங்களும்,

கிளிநொச்சி மாவட்டம்.

(3) கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்,விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்,முழங்காவில் மாவீரரதுயிலும்இல்லம் ஆகிய மூன்று துயிலும் இல்லங்களும்,   முல்லைத்தீவு மாவட்டம்.

(5) முள்ளியவளை துயிலுமில்லம்,அலம்பில் துயிலுமில்லம், ஆலங்குளம் மாவீரர்              துயிலுமில்லம்,வன்னிவிளாங்குளம் மாவீரர்துயிலுமில்லம்,களிக்காடு (நெடுங்கேணி) மாவீரர் துயிலுமில்லம் ஆகிய ஐந்து துயிலும் இல்லங்களும்,மன்னார் மாவட்டம்.

(2)  ஆட்காட்டிவெளிமாவீரர்துயிலுமில்லம்   

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் ஆகிய இரண்டு துயிலும் இல்லங்களும்,    வவுனியா மாவட்டம். 

(1) ஈச்சங்குளம் மாவீரர துயிலுமில்லமும் மணலாறு பிரதேசம். (2)                          உயர்பீடம் (டடி முகாம்) மாவீரர் துயிலுமில்லம்,                                         இதயபீடம் (ஜீவன் முகாம்) மாவீரர் துயிலுமில்லம் ஆகிய இரண்டு துயிலும் இல்லங்களும்

   

திருகோணமலை மாவட்டம்.  (4) ஆழங்குளம்மாவீரர்துயிலுமில்லம்,              தியாகவனமமாவீரரதுயிலுமில்லம்.                             பெரியகுளம்மாவீரரதுயிலுமில்லம்,உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.  ஆகிய்நான்கு துயிலும் இல்லங்களும்மட்டக்களப்பு மாவட்டம். 

(4) தரவை மாவீரர் துயிலுமில்லம்,தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம், வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்,                    மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லம்.   ஆகிய நான்கு துயிலும் இல்லங்களும்,

அம்பாறை மாவட்டம். 

(1). கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லமுமாக மொத்தம் 27 துயிலும் இல்லங்கள் மட்டுமே 

2008 இறுதிவரை இருந்தது. இருந்தன. ஆனால் 

போர் உக்கிரமான போது அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் (6)                  விபரம் வருமாறு  தர்மபுரம் மாவீரர் துயிலுமில்லம்,சுதந்திரபுரம் மாவீரர் துயிலுமில்லம்.  இரணைப்பாளை மாவீரர் துயிலுமில்லம்.  பச்சைப்புல்வெளி மாவீரர் துயிலுமில்லம.  கரையா முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம். வெள்ளா முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம்.

ஆகிய ஆறு துயிலும் இல்லங்களும் இறுதிப்போர் 2009, மே,18 வரை அமைக்கப்பட்டன. எல்லாமாக மொத்தம் 33, துயிலும் இல்லங்களில் இதுவரை ஏறக்குறைய ஐம்பதாயிரம் மாவீரர்களின் உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது

அதேவேளை வடக்கு கிழக்கிற்கு வெளிமாவட்டங்களிலும், கடல் சமர்களில், கரும்புலிகள் என மரணித்தவர்களின் நினைவு கற்களும் இந்த துயிலும் இல்லங்களில் அவர்களின் பெயர் குறிப்பிட்டு நடப்பட்டிருந்தமையையும் அப்போது காணமுடிந்தது.

ஏற்கனவ தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் கடந்த 27/11/1982 தொடக்கம் 30/09/2001,வரை உயிர்நீத்த மாவீரர்கள் 17648 பேர் என விடுதலைப்புலிகளால் கடந்த 2001, செப்டம்மர்,30,ல் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். ஆனால் 2009, மே,18 வரை உத்தியோகபூர்வமாக உயிர் நீத்தவர்களின் விபரம் வெளியிடப்படாதபோதும் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் என்கூறப்படுகிறது.

தமிழ் இளைஞர்ரகள் மட்டுமன்றி இஷ்லாமிய இளைஞர்களும் 1990 க்கு முன்னம் 45 பேர் அப்போது விடுதலைப்புலிகளால் மாவீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.அவர்களின் விபரம் 

.

1.ஜுனைதீன்  ஓட்டமாவடி,

இறப்பு: 30.11.1985,

2.லத்தீப் முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம் காத்தான்குடி, 

இறப்பு 24.12.1986,

3. நசீர் முகமட் நசீர்  காங்கேயன்ஓடை,

இறப்பு: 30.12.1987,

4. சாபீர் சரிபுதீன் முகமட் சாபீர் தியாவெட்டுவான், 

இறப்பு 13.05.1988,

5. முகமது உசைதீன் ஓட்டமாவடி 

இறப்பு 05.08.1989,

6. ஆதம் எஸ்.எம்.ஆதம்பாவா சாய்ந்தமருது 

இறப்பு 03.01.1990,

7. அகமட் றியாஸ் மருதமுனை 

இறப்பு 04.05.1990,

8. கபூர் முகமதுஅலியார் முகமதுசலீம் காங்கேயன்ஓடை, 

இறப்பு 11.06.1990,

9 . தாகீர் முகைதீன்பாவா அன்சார் திருகோணமடு, பொலனறுவை, 

இறப்பு 01.06.1990, 

10.கரீம் முஸ்தபா  ஓட்டமாவடி, 

இறப்பு  12.06.1990,

11. தௌபீக் இஸ்மாயில் ஓட்டமாவடி, இறப்பு 12.06.1990,

12. ஜிவ்றி முகம்மது இலியாஸ்  4ம் வட்டாரம், மீராவோடை,  வாழைச்சேனை,

இறப்பு 13.06.1990,

13. அகமட்ஓட்டமாவடி, 

இறப்பு 14.06.1990, 

14. ஜலீம் முகமது இஸ்மாயில் மன்சூர் ஏறாவூ

இறப்பு 01.09.1990,

15. மஜீத் முகமது இஸ்காக் கூப்சேக்அலி மீராவோடை, 

இறப்பு 18.06.1990,

16.லெப்பைதம்பி செய்னூர் ஓட்டமாவடி,  வாழைச்சேனை, 

இறப்பு 19.06.1990,

17. அகமதுலெப்பை முகமது கனீபா அக்கரைப்பற்று, 

இறப்பு 07.01.1987, 

18.   யுனைதீன் அட்டாளைச்சேன 

இறப்பு 26.06.1988,

19. சம்சுதீன் அபுல்கசன் அக்கரைப்பற்று,

இறப்பு 27.10.1988,

20. சம்சுதீன் நசீர் ஒலுவில் இறப்பு17.02.1989,

21.நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பைஅககரைப்பற்று, 

இறப்பு 22.06.1989, 

22. ஜபார் ஜாபீர் அட்டாளைச்சேனை, இறப்பு 06.12.1989,

23. மீராசாகிபு காலிதீன் சாய்ந்தமருது, அம்பாறை 

இறப்பு 06.12.1989.

24. அகமட் லெப்பை செப்லாதீன் : வேப்பச்சேனை, அம்பாறை  

இறப்பு 25.05.1990,

25.  முகமது ரபீக் பொத்துவில்,

இறப்பு  15.06.1990,

26.. மாப்பிள்ளை லெப்பை அல்வின் : இறக்காமம்,

இறப்பு 16.06.1990,

27..அபுசாலி புகாரி அக்கரைப்பற்று,

இறப்பு 15.07.1990, 

28.. முகமது அலிபா முகமது ஹசன் பேராறு, கந்தளாய்,  திருகோணமலை. இறப்பபு 28.04.1987,

29. ஆதம்பாவா ஹசன் : மூதூர், திருகோணமலை. 

இறப்பு 05.11.1989,

30.நைனா முகைதீன் நியாஸ் : நிலாவெளி, திருகோணமலை.

இறப்பு 06.02.1990,

31.  ஆப்தீன் முகமட் யூசுப் குச்சவெளி, திருகோணமலை 

இறப்பு 15.06.1990,

32.நியாஸ்  மூதூர், 

இறப்பு 17.06.1990,

33. கச்சுமுகமது அபுல்கசன் 1ம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 

இறப்பு 14.06.1990,

34.கனீபா முகமதுராசீக் திருகோணமலை. 

இறப்பு 22.06.1990,

35.அப்துல நசார் புடவைக்கட்டு, திருகோணமலை. 

இறப்பு 27.07.1990,

36. அப்துல்காதர் சாதிக்யாழ்ப்பாணம். இறப்பு 25.08.1986,

37..ரகீம் யாழ்ப்பாணம் 

இறப்பு08.05.1986,

38. ரகுமான் யாழப்பாணம் 08.05.1986, 

39.சலீம் யாழ்ப்பாணம் 

இறப்பு 03.07.1987, 

40.கமால் மட்டக்களப்பு 

இறப்பு 07.06.1990 ,

41.அப்துல்காதர் சம்சி காத்தான்குடி இறப்பு 13.06.1990,

42.அன்வர் அட்டாளச்சேனை 

இறப்பு 15.06.1990,

43.கபீர்அக்கரைப்பற்று, அம்பாறை இறப்பு 15.06.1990, 

44. அப்துல்மானாப்முகம்மதுநசீம் கிண்ணியா 

இறப்பு 25.07.1986,

45 மொகமட் மூதூர், திருகோணமலை இறப்பு 25.07.1986 

ஆகியோரின் பெயர்களை அப்போது விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டது இந்த 45, பெயரை விடவும் இன்னும் சிலர் இருந்திருக்கலாம். 


முஷ்லிம் இளைஞர்கள் விடுதலைப்புலிகளில் இணைந்து போராடியதை சகித்துக்கொள்ளாத அரசுகள் தமிழர்களையும் முஷ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரமாகவே 1990,ல் முஷ்லிம் ஊர்காவல் படையினரை உருவாக்கி தமிழர்களுக்கு எதிராக பல கொலைகள் அரங்கேறின கிழக்கில் முஷ்லிம் தமிழ் உறவை பிரித்த வரலாறு சிங்கள ஆட்சியாளர்களாலேயே அரங்கேற்றப்பட்டது என்பது மறுதலிக்க முடியாத உண்மை.

இதன் எதிரொலிகளாகவே காத்தான்குடி பள்ளிவாசல், ஏறாவூர் என முஷ்லிம் மக்கள் படுகொலைசம்பவங்களும், யாழ்ப்பாணத்தில் முஷ்லிம்மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.

மாவீரர் தினத்தில் வடக்கு கிழக்கிற்கு வெளியே கொழும்பு தலைநகரை அண்டிய    ஶ்ரீ ஜெயவர்தன புர கோட்டே இலங்கையின் சட்டம் இயற்றும் உயர் சபையான  இலங்கை பாராளுமன்றத்தின் வளாகத்திலும் சரித்திரத்தில் முதல்தடவையாக  மாவீரர்களை விளக்கேற்றி அஞ்சலி செய்த வரலாறும் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு.                                        

ஆம் கடந்த 2004, நவம்பர்,27,ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தர் ஐயா தலைமையில் 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்திற்கு முன்பாக அன்று 6.05 மணிக்கு 22, சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டதுடன் சம்மந்தன் ஐயா மாவீரர்கள் தொடர்பாக கருத்துரையும் தெரிவித்திருந்ததார் இந்த செய்தி அப்போது பரப்பாக ஊடகங்களில் மறுநாள் வெளிவந்தன இந்த நிகழ்வில் நானும்(பா.அரியநேத்திரன்) அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றினேன்.

27/11/2009,தொடக்கம் துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் தன்னகப்படுத்தியதால் வடகிழக்கு தாயகத்தில் சில வருடங்கள் துயிலும்

இல்லங்களில் விளக்கேற்றாதபோதும்,மாவீரர்தின உரை இடம்பெறாவிட்டாலும் தமிழ்மக்கள் ஏதோஒருவகையில் வணக்கம் செலுத்திவந்துள்ளனர் இராணுவத்தடைகளை மீறியும் பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்தேசிய அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், முன்னாள் போராளிகள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தாமல் விடவில்லை ஆனால் புலம்பெயர் தேசமெங்கும் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளிலும் எமது அயல்நாடான

தமிழ்நாட்டிலும் உலகத்தில் பரந்துவாழும் உறவுகள் மிகவும் எழுச்சியாக நினைவுகூர்ந்து வருகின்றனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 27,லும் இம்முறையும் வழமை போன்று அனுஷ்டிப்பு இடம்பெறும்.