தேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் சாதனை!!


(கல்லடி குறூப்நிருபர்)
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முருகேந்திரன் குருஷாத் சாதனை படைத்துள்ளார்.

கண்டி மாநகர உள்ளக விளையாட்டு அரங்கில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் இடம்பெற்ற மூன்று KATA சுற்று போட்டிகளிலும் அதிகூடிய புள்ளிகளை பெற்று தனது பாடசாலைக்கு தங்கப் பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதேவேளை 2019 இல் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியிலும் இவர் KATA போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் கராத்தே மருயோஷிக்காய் அமைப்பின் கிழக்கு மாகாண போதனாசிரியர் பொறியியலாளர் எஸ்.முருகேந்திரன் இவரை பயிற்றுவித்துள்ளதுடன், மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வா.லவக்குமார் மற்றும் பாடசாலை அதிபர் இ.பாஸ்கரன், பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகம் ஆகியோர் குறித்த மாணவனை பாராட்டியுள்ளனர்.