எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு கருத்துரங்குகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு,சின்னஊறனி பிரமிக்கல்வி நிலையமும் புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பும் இணைந்து இந்த கருத்தரங்கினை ஏற்பாடுசெய்திருந்தது.
சின்னஊறனி பிரமிக்கல்வி நிலையத்தின் பணிப்பாளரும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பாடவிதான பிரபல ஆசிரியருமான எஸ்.எஸ்.மோகன் தலைமையில் நடாத்தப்பட்ட செயலமர்வில் புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பின் பணிப்பாளர் சா.சுதாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் எதிர்பார்க்கை வினாவிடைகளைக்கொண்டதாக இந்த கருத்தரங்கு மாணவர்களுக்கு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று வவுணதீவு பகுதியிலும் கருத்தரங்கு அண்மையில் வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த கருத்தரங்கில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


.jpeg)
.jpeg)



.jpeg)
