எருவில் பிரதேசத்தில் உள்ள எருவில் இளைஞர் கழகம்,உதயநிலா கலைக்கழகம்,கண்ணகி விளையாட்டுக்கழகம் இணைந்து இந்த உழவர் சிலையினை எருவில் கொம்புச்சந்தியில் நிர்மாணித்துள்ளது.
இதன் திறப்பு விழா இன்று கண்ணகி விளையாட்டுக்கழக தலைவரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினருமான இ.வேணுராஜ் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் பெரும்பான்மையாக துறையாக காணப்படுகின்றது இந்தநிலையில் உழவர்களை நினைவு கூறும் முகமாக மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எருவில் பிரதேசத்தில் உழவர் சிலை இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் பிரதம அதிதியாகவும் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன் சிறப்பு அதிதியாகவும் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் என பல தரப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.
அதிதிகளை வரவேற்று மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் உழவர் சிலை அத்திகளினால் திறந்துவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வரவேற்பு நடனம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை முறையினை வெளிப்படுத்தும் நடனங்களும் அரங்கேற்றப்பட்டது.உழவர் சிலையினை நிர்மாணம் செய்வதற்கு நன்கொடை வழங்கிய அனைவரையும் கௌரவப்படுத்தும் முகமாக நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு எருவில் பகுதியில் உள்ள நூலகத்திற்கு தேவையான நூல்களும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிராம இளைஞர்கள் மற்றும் அரநெறி பாடசாலையினால் வழங்கி வைக்கப்பட்டது.