அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் 178 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. ஆதரவாக 179 வாக்குகள் எதிராக 1 வாக்கு .(சரத் வீரசேகரா)
தமிழ்தேசியகூட்டமைப்பில் இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகம் கொடுத்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சம்மந்தன், வினோகரநாதலிங்கம் சாணாக்கியன் தவிர்ந்த ஏழுபேர் கலந்துகொண்டனர்.
விவாதங்களில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 22வது திருத்த சட்டமூலத்தில் முன்னேற்றகரமான எதுவும் இல்லை என உரையாற்றி இருந்தார்.
வாக்கெடுப்பின்போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமூகம் கொடுக்கவில்லை, ஏனய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் , சாள்ஷ், கலையரசன், கருணாகரன் , சித்தாத்தன், செல்வம்அடைக்கலநாதன் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சா உட்பட பெரமுன தரப்பில் பலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அத்தோடு இந்த சட்டமூலத்தின் பிரகாரம் இரட்டைகுடியுரிமை கொண்டோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுடன் தற்போதுள்ள பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள இரட்டை குடியுரிமை கொண்டோரின் உறுப்புரிமை இல்லாதும் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 22 சட்ட திருத்தத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய தனக்கென ஏற்படுத்திகொண்ட தன்னிச்சையான அதிகாரங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளன.
சுயாதீனமாக ஆணைக்குழுக்கள் செயற்பட வழி அமைக்கப்பட்டுள்ளன.
ராஜபக்சக் குடும்பத்தினர் வாழையடிவாழையாக ஜனாதிபதி பதவியைத் தமதாக்கி உச்சமாக அதிகார போகத்தை அனுபவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட 20வது திருத்தம் நீக்கப்பட்டுள்ளது.
இப்படியான பல நன்மைகள் கொண்ட 21வது திருத்தத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட முடியாது.
.jpeg)