தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார திருச்சடங்கு சக்தி விழா

 


வி.சுகிர்தகுமார்

கறை கழைந்து குறைபோக்கி நிறைவாக்கி எம்மவர்க்கு கலைவளமும், திருவருளும், எழில் வளமும் இனிதே வளங்கும் பழம்பெரும் பதியாம்  கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார திருச்சடங்கு சக்தி விழா இன்று (06) திருக்கதவு திறக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகின்றது. 

 முனிவர்களாலும் தேவர்களாலும் ஆசீர்வதிக்கப் பெற்று சித்தர்களாலும் சமய குரவர்களாலும் போற்றப்பட்டு பல தத்துவஞானிகளையும் அறிஞர்களையும் ஈர்த்த இந்துமா சமுத்திரத்தின் முத்தெனத்திகழும் இயற்கை அன்னை அரவணைப்பில் இலங்கை மணித்திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் தம்பிலுவில் பகுதி விஸ்வப்பிரம்ம குலத்தோர் செறிந்துவாழும் முனையூர் பதியில் அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மனின் தீமிதிப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இன்று சடங்கின் கிரியைகள் ஆரம்பமாகின்றது.

இதனை முன்னிட்டதாக பாற்குட பவனி 09ஆம் திகதியும் வீரகம்பம் வெட்டுதல் 11ஆம் திகதியும் வீதி உலா 12ஆம் திகதியும் இடம்பெறவுள்ளதுடன்; 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீமிதிப்பு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை இடம்பெறும் பால்பொங்கல் இரவு இடம்பெறும் வைரவர் வேள்வியுடனும் கிரியைகளுடனும் நிறைவுறும்;.

ஆலய தலைவர் க.சசிகாந்தன் தலைமையில் ஆலய நிருவாகத்தின் மற்றும் குடிபூசை முகாமைக்காரர்கள் மகளிர் அமைப்பினர் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலோடு இடம்பெறும் வருடாந்த அலங்கார திருச்சடங்கு சக்தி விழாவின் கிரியைகள் யாவற்றையும் பிரதிஸ்டா பிரதமகுரு தேசமான்ய அருட்கலைத்திலகம் காளிபூஜா துரந்தரர் விஸ்வபிரம்மஸ்ரீ செ.சற்குணராஜா தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைக்கவுள்ளனர்.