மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் உயர்தரப்பரீட்சையில் சாதனை படைத்த சாதணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
புனித மைக்கேல் கல்லூரியின பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்த சாதனையாளர்கள் கௌரவிப்ப நிகழ்வு நடைபெற்றது.
புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இயேசு சபையின் கிழக்கு பிராந்திய மேலாளர் அருட்பணி ரீ.சகாயநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு அதிதிகளாக புனித மிக்கோல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை ஏ.ஏ.நவரெட்ணம் நவாஜி அடிகளார், இயேசு சபைத் துறவிகளான போல் சற்குணநாயகம், சுவைக்கீன் ரொசான், ஜோஜ் ஜீவராஜ், ரெக்ஸ கிறே அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள்,சாதனை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
உயிர்தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் விஞ்ஞான பிரிவில் முதலிடம்பெற்று கிழக்கு மாகாண கல்வி வரலாற்றில் முதல் சாதனை மாணவனாக தடம் பதித்த தமிழ்வாணன் துவாரகேஸ் உட்பட கணித,விஞ்ஞான,வர்த்தக பிரிவில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது உயர்தர பிரிவு மாணவர்களை வழிநடாத்திய ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.