மட்டக்களப்பில் காணாமல் போன பெண் ஒருவர் விபத்தில் சிக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஏ.எஸ்.சித்தி நழீபா எனும் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க குடும்பத்தார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன தாய் இரண்டு நாட்களுக்கு முன்னர் கல்முனை - அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அப் பெண்ணின் கணவர் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
