கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பளுதூக்கல் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சம்பியனாக தெரிவாகியுள்ளனர்.
பெண்கள் பிரிவில் 06 தங்கப்பதக்கத்தினையும், 04 வெள்ளிப் பதக்கத்தினையும், 02 வெங்கலப் பதக்கத்தினையும், ஆண்கள் பிரிவில் 05 தங்கப்பதக்கத்தினையும், 05 வெள்ளிப் பதக்கத்தினையும், 04 வெங்கலப் பதக்கத்தினையும் பெற்றுள்ளனர்.
இவ் அணியில் மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
மண்முனைபற்று அணியின் பயிற்றுவிப்பாளராக விளையாட்டு உத்தியோகத்தர் அ.சிவகுமாரும், மண்முனை வடக்கு அணியின் பயிற்றுவிப்பாளராக ச.சதீஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
