QR குறியீடு தொடர்பில் விசேட எச்சரிக்கை!!


சட்டவிரோதமான முறையில் QR குறியீட்டை பதிவு செய்து பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதி QR முறைமை தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இது குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளுக்கு QR குறியீட்டு முறைமையை பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், ஒரு தொலைபேசி எண்ணில் வணிக பதிவு எண் மூலம் பல வாகனங்களை பதிவு செய்தல், அரசு வாகனங்களுக்கான பிரத்யேக பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் பதிவு செய்தல், சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.