எரிவாயுவின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
நிதியமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று எரிவாயு விலை குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வரிசைகள் உருவாகாது என்பதை உறுதிப்படுத்த போதுமான அளவு எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்த்தார்.
